ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
நல உதவிகள்
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அருளாசியுடன் 38-ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணிப் பணி ஆன்மிக இயக்கம் சார்பில் நடைபெற்றது. தூத்துக்குடி 3ம் மைல் திருவிக நகர் சக்தி பீடத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 1008 குங்கும அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரையண்ட் நகர் நேசக்கரங்கள் இல்லம், நியு நேசக்கரங்கள் முதியோர் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா ஊனமுற்றோர் பள்ளி, லூசியா பார்வையற்றோர் குடியிருப்பு, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், கதிர்வேல் நகர் ஆன்மாவின் உள்ளங்கள், பாசக்கரங்கள் முதியோர் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழ அழகாபுரி பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மெர்சி பார்வையற்றோர் இல்லம், நரிக்குறவர் குடியிருப்புகள் மற்றும் தெருவோர ஏழை மக்கள் உள்ளிட்ட 1,200 பேருக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு மற்றும் புத்தாடைகள், வேஷ்டி சேலைகள், போர்வைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வேள்விக்குழு இணைச்செயலாளர் கிருஷ்ண நீலா, திருவிக நகர் சக்தி பீட துணைத்தலைவர் திருஞானம், வேள்விக்குழு பத்மாவதி, சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், புதியதுறைமுகம் மன்ற பொறுப்பாளர்கள் தனபால், பாண்டி, ஆதிநாராயணன், பாக்கியம், காமராஜ், மந்திரமூர்த்தி, கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.