கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

ராசிபுரத்தில் கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு தரப்பினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். அதன்படி கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளையின் சேவையாளர் கே..ரமேஷ் தலைமையில் ராஜி இன்ஜினியர், வசந்தி, பாலகிருஷ்ணன் , கவின் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் சித்திரை திருநாளை முன்னிட்டு பதினோரு மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை பெற்று கொண்ட அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
Next Story


