இராசை நண்பர்கள் குழு சார்பில் நலத்திட்ட உதவிகள்
இராசை நண்பர்கள் குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ராசிபுத்தில் மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு இராசை நண்பர்கள் குழு சார்பாக பாரதி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மூன்றாம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இராசை நண்பர்கள் குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்து 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள், பெட்ஷீட், பேரிச்சம்பழம், பிஸ்கட் போன்ற பொருட்களும், சிக்கன் பிரியாணி, சேமியா பாக்கெட், கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் இராசை நண்பர்கள் குழு P.T.விஜய், தலைமை வகித்தார். மேலும் கதிரவன், ரஞ்சித் குமார், அருணாசலம், விமல் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.