திருப்பத்தூர்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருப்பத்தூர்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

மாற்று திறனாளிகள் நலத் துறை 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று சக்கர நாற்காலி வண்டிகள், செயற்கை கால்கள், காதொலி கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மருத்துவ அலுவலர் பிரபாகரன் மற்றும் முடக்கியல் நிபுணர் இனியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story