நாட்டுப்படகு சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

நாட்டுப்படகு சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
X

நாட்டுப்படகு சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி, தருவைக்குளம் நாட்டுப்படகு சங்கம் சாா்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் புனித சந்தியாகப்பா் நாட்டுப்படகு சங்கம் சாா்பில் தாளமுத்துநகா் பொியசெல்வம் நகாில் உள்ள மாப்பிள்ளையூரணி மகளிா் கூட்டமைப்பு மகளிா் அரங்கத்தில் தருவைக்குளம் பங்குதந்தை வின்சென்ட் அடிகளாா் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட மீனவா் கூட்டமைப்பு தலைவா் செந்தில்குமாா் முன்னிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ,சிலுவைப்பட்டி மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜேசுபாலன், புனித சந்தியாகப்பா் நாட்டுப்படகு சங்கத்தலைவா் மாியமாணிக்கம், சகாயராஜ், சிலுவை, நீக்குலாஸ் குனசேகா், பிாிட்டோ ஹிட்லா்ராஜ், மாவட்ட காமராஜா் நற்பணி மன்றத்தலைவா் லாரன்ஸ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிா் கூட்டமைப்பு தலைவி பிரேமா, செயலாளா் லூா்துபாக்கியம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story