கலைஞர் 101-வது பிறந்தநாளில் நலஉதவிகள் - திமுக தீர்மானம்
தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று கலைஞர் மாளிகையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சுபாசு தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர அவைத்தலைவர் முருகன், மாநகர செயலாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-வது பிறந்த நாள் விழாவான ஜூன் 3-ந்தேதி, சேலம் மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், மரக்கன்றுகள் நடுதல், கட்சி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்க வேண்டும். இதேபோன்று மத்திய மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் எழுச்சியோடு கருணாநிதி பிறந்த நாளை கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணை செயலாளர்கள் கணேசன், தினகரன், பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, சரவணன், பிரகாஷ், மண்டல குழு தலைவர்கள் அசோகன், தனசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, குபேந்திரன், நாசர்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ரெயின்போ நடராஜன், அறிவழகன், ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செந்தில், ஜோதி உள்பட மாநகர், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.