ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அம்மாபேட்டை சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுதா ராணி தலைமையில் நடைபெற்றது பொது மக்களிடம் இருந்து 244 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா , பட்டா மாறுதல் ஆணை ,பட்டா நகல் உள்பட 43 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஜமாபந்தி அலுவலர் வழங்கினார் மேலும் வருவாய் தீர்வாயத்தின் நிறைவு நாளில் வருவாய் தீர்வாக அலுவலர்களால் விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு வேளாண்மை துறை ஊரக வளர்ச்சி துறை வேளாண் பொறியியல் துறை புள்ளியல் துறை சார்ந்த உட்கோட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பாசன தொடர்பான கருத்துரு முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனுக்களாக வழங்கினார்கள் .விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜமாபந்தி அலுவலர் தெரிவித்தார் .
இம்முகாமில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் கண்காணிப்பாளர் ஜெயகாந்தி வட்ட வழங்க அலுவலர் அருணகிரி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் வட்ட சார்ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வருவய் ஆய்வாளர் மாலினி துணை வட்டாட்சியர்கள் தமயந்தி பிரியா பிரபு கிராம நிர்வாக அலுவலர்கள் நீலகண்டன் ராஜேஷ் பவுல் ஆரோக்கியராஜ் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைத்து துறை அலுவலர்களும் வருவாய் துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர்