மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்


மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற் றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக் களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 608 பேர் மனுக்களை கொடுத்தனர்.

இம்மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நலத்துறை சார்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 6 மாற்றுத்திற னாளிகளுக்கு தலா ரூ.2,780 வீதம் ரூ.16,680 மதிப்பீட்டில் காதொலி கருவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.4,891 மதிப்பில் சலவைப்பெட்டியையும் கலெக்டர் வழங்கினார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story