அம்பேத்கர் நினைவு நாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெரு பகுதியில் பட்டியல் பழங்குடியினர் சம்மேளனத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 67-ம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கரின் உருவசிலைக்கு பட்டியல் பழங்குடியினர் சம்மேளன விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆர்.நாகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஏழை பெண்கள் 200 பேருக்கு சேலை மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமத்துவம் மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனர் தீபன், எஸ்.சி., எஸ்.டி. பெடரேஷன் அமைப்பாளர் தனசேகரன், ஆடிட்டர் நடராஜன், அயினம்பாளையம் சங்கமித்ரா அறக்கட்டளை நிர்வாகி வைகுந்தம், எஸ்.சி., எஸ்.டி. பெடரேஷன் நிர்வாகிகள் கோவிந்தன், வேலாயுதம், விசாலாட்சி, நேரு மகளிர் மன்ற நிர்வாகி புவனேஸ்வரி, இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் மார்த்தாண்டன், பாண்டியன் உள்படபலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story