வீடுகளை இழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவி 

வீடுகளை இழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவி 

 கன்னியாகுமரியில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் சேதமடைந்த வீடுகளை புதிதாக கட்ட அரசு சார்பில் பயனாளிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.    

கன்னியாகுமரியில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் சேதமடைந்த வீடுகளை புதிதாக கட்ட அரசு சார்பில் பயனாளிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் (2023) பெய்த கனமழையினால் சேதமடைந்த வீடுகளை புதிதாக கட்ட தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் குமரி மாவட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.4.00 இலட்சம் வீதம் 13 பயனாளிகளுக்கு ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு விசை உழுவை இயந்திரங்களும், 4 விவசாயிகளுக்கு புல் வெட்டும் கருவிகளும் வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், தலைமை வகித்தார். அமைச்சர் த.மனோ தங்கராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, பூதலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story