கும்பகோணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கும்பகோணம் மூர்த்தி கலையரங்கத்தில் மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தங்கம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் மக்களவை உறுப்பினர்கள் எஸ். எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), செ. இ ராமலிங்கம் (மயிலாடுதுறை) ஆகியோர் நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில், மக்களுடன் முதல்வர் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு ரூ. 3.84 லட் சம் மதிப்பீட்டிலும், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவித்தொகை ஒரு பயனாளிக்கு ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 500-ம், இயற்கை மரண உதவித் தொகை 37 பயனாளிகளுக்கு தலா ரூ. 22 ஆயி ரத்து 500 வீதம் மொத்த மதிப்பு ரூ.8.32 லட் சமும், திருமண உதவித்தொகை 3 பயனாளிகளுக்கு ரூ. 26 ஆயிரம் என மொத்தம் ரூ.8.59 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் 71 பயனாளிகளுக்கு விலை யில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட் டன. நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மற்றும் வருவாய்த் துறையின் மூலம் 200 பய னாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங் கப்பட்டன. மேலும், சமூக நலத்துறை மூலம் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.3.67 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், கும் பகோணம் மேயர் க.சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் சு.க. முத்துசெல்வம், கும்பகோணம் கோட்டாட்சியர் செ. பூர்ணிமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.