காடுவெட்டியில் விவசாயிகளுக்கு நலதிட்டம் வழங்கும் விழா

காடுவெட்டியில் விவசாயிகளுக்கு நலதிட்டம் வழங்கும் விழா

தென்னை கன்றுகள் வழங்கல்

காடுவெட்டியில் விவசாயிகளுக்கு நலதிட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாரம் வேளாண்மைத் துறையின் கீழ் காடுவெட்டி கிராமத்தில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் மற்றும் திரவ உயிர் உரங்கள்,மின்கல தெளிப்பான் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந. தியாகராஜன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான், தென்னங்கன்றுகள் மற்றும் உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் த.புஷ்பாசிவக்குமார் பங்கேற்று காடுவெட்டி கிராமத்தில் 2023- 24 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு தலா இரண்டு தென்னைக்கன்றுகள் வீதம் 300 குடும்பத்திற்கு 600 தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

எனவும்,மாநில மற்றும் மத்திய திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சுபா செய்திருந்தார்.

Tags

Next Story