மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட விளக்க பிரசாரம்- ஆட்சியர் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட விளக்க பிரசாரம்-  ஆட்சியர் பங்கேற்பு

 தெருமுனை பிரச்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையம் எதிரில் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் விளக்கம் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகள் கணக்கெடுப்பு - 2023 விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story