காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

நாடாளுமன்ற தொகுதி பொதுமக்கள் தற்போது எதிர்பார்க்கும் செயல்பாடுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி கடந்த 2008க்கு முன்பு வரை செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்து வந்தது. தற்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கி உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் செய்யூர் திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிகள் என ஆறு தொகுதிகளில் உள்ளடக்கி அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்ற தொகுதி பொதுமக்கள் தற்போது எதிர்பார்க்கும் செயல்பாடுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். பட்டு நெசவு உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு மிகவும் நலிவடைந்து வந்த நிலையில் தற்போது பட்டுப் பூங்கா திமுக ஆட்சியில் மெல்ல பூக்க தொடங்கியுள்ளது இருப்பினும் புதிய நெசவாளர்கள் உருவாகவில்லை என்பது அனைவருக்கும் வருத்தமாகவே உள்ளது.

கைத்தறி என்பது மாறி தற்போது விசைத்தறியில் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை மற்றும் தற்போதைய இளம் பெண்கள் விரும்பும் வகையில் டிசைன், வண்ணம் என பல வகைகளில் அதற்கு கை கொடுப்பதால் அதன் கையே ஓங்கி உள்ளது. ஏரிகள் நிறைந்த மாவட்டங்கள் என உள்ள இந்த நாடாளுமன்ற தொகுதியில் நீர்த்தேக்கம் என்பது பெரிதும் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது. முக்கிய ஏரியான மதுராந்தகம் ஏரி தற்போது தூர் வாரும் நிலையில், கடந்த ஒரு வருட காலமாக இப்பகுதியில் விவசாயம் இல்லை என்பது கவலைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. பல ஏரிகள் தூர்வாரினாலும் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. இதனால் விவசாயத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பாலாற்றில் எந்தவித தடுப்பணைகளும் கூடுதலாக கட்டப்படாதது அதிக வருத்தத்தை ஏற்பட்டாலும் செய்யாற்றில் சில தடுப்பணைகள் தற்போது உருவாகியுள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளதால் விவசாயிகளுக்கு தற்போது கூடுதலாக கணிசமான வருவாய் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சி. சுற்றுலா : உலக புகழ்பெற்ற மாமல்லபுரம், வேடந்தாங்கல் காஞ்சிபுரம் என பல சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் அடிப்படை வசதிகள் சுற்றுலா பயணிகளுக்கு இல்லை என்பது பெரும் குறையாகவே கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை உள்ளது. மாமல்லபுரத்தில் பல உலக நிகழ்வுகள் நடந்தாலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவித பயனும் இல்லாதது வருத்தமளிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் போது மட்டுமே உள்ளூர் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் அதனை மத்திய மாநில அரசுகள் கருத்தில் கொண்டு சுற்றுலா தலங்களை மேம்படுத்தவேண்டும்.

வேலைவாய்ப்பு : காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை செங்கல்பட்டு திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே கணினி தொழில்நுட்ப பூங்காவில் வேலை கிடைக்கிறது. இதைத் தவிர்த்து செங்கல்பட்டு செய்யூர் மதுராந்தகம் பகுதியில் எந்த ஒரு பெரிய நிறுவனங்களும் கீழ் தட்டு மக்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பை அளிப்பதில்லை. குறைந்த ஊதியம், கூடுதல் கால நேர பணி என இவர்களுக்கு போட்டியாக வடமாநில தொழிலாளர்கள் வருகையால் இப்பகுதியில் பெருமளவில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி தற்போது வேட்பாளர்கள் உள்ள நிலையில் அவர்களை எவ்வாறு எதிர்கொண்டு வருங்காலங்களில் செயலாற்றும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினரை மக்கள் எவ்வாறு தேர்வு செய்வார்கள் ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Read MoreRead Less
Next Story