கச்சத்தீவு விவகாரத்தில் மோடி 10 ஆண்டுகளாக என்ன செய்தார்?

கச்சத்தீவு விவகாரத்தில் மோடி 10 ஆண்டுகளாக என்ன செய்தார்?

கச்சத்தீவு குறித்து இப்போது பேசும் மோடி 10 ஆண்டுகளாக யாருக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தார் என கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார். 

கச்சத்தீவு குறித்து இப்போது பேசும் மோடி 10 ஆண்டுகளாக யாருக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தார் என கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

கச்சத்தீவு குறித்து இப்போது பேசும் மோடி 10 ஆண்டுகளாக யாருக்கு பேன் பார்த்துக்கொண்டிருந்தார் -ஒசூர் அருகே தேர்தல் பரப்புரையில் சிபிஐ முத்தரசன் விலாசல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தளி எம்எல்ஏ இராமச்சந்திரனுடன் பேரணியாக வந்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன்: தேர்தல் நெருங்க நெருங்க மோடிக்கு ஜொரம் அதிகமாகி உள்ளது. 400 தொகுதிகளில் வெல்வோம் என்றவர் தற்போது 300, 200, 180 தொகுதிகள் வெற்றி பெறலாமா என எண்ணிக்கை சரிய தொடங்கி உள்ளது, இது மேலும் சரியும் தேர்தல் முடிவுகள் குறித்து பிரச்சனையை திசை திருப்ப மோடி முயற்சி, 1974 ல் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது அதை மீட்க ப்பட வேண்டுமென்பது இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கையாக உள்ளது 10 ஆண்டுகாலத்தில் இது தவறு என பிரதமர் மோடி கருதி இருந்தால், சட்டபூர்வமாக மீட்டிருக்கலாம் 10 ஆண்டுகளாக மோடி யாருக்கே பேன் பார்த்தார்கள் என சொல்ல வேண்டும்.

10 ஆண்டுகாலத்தில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை மனைவியுடன் வாழ முடியாத, வாழ தெரியாதவன் மோடி மனைவியுடன் வாழாதவர் மக்களுடன் குடும்பம் எனக்கூறி எப்படி வாழ முடியும் கடந்த தேர்தல்களில் இந்திய கூட்டணி பிரிந்து நின்றதால் மோடி பிரதமரானார் . பெரும்பாலான மாநிலங்களில் இந்திய கூட்டணி உறுதியாகி தேர்தலை சந்திக்கிறது பாஜக - பாமக நள்ளிரவு கூட்டணி, அதிமுக கூட்டணி கள்ளக்கூட்டணி இவர்கள் ஒன்றாக இருந்தபோதே 39 தொகுதிகளை கைப்பற்றினோம் இப்போதும் முன்பை விட அதிகஅளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என பேசினார்

Tags

Read MoreRead Less
Next Story