10 ஆண்டுகளில் பாஜக என்ன செய்துள்ளது ? - பாலகிருஷ்ணன்

10 ஆண்டுகளில் பாஜக என்ன செய்துள்ளது ? - பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன் பிரசாரம் 

பா.ஜ.க 10 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தது. ஆனால் 3 ஆண்டுகளில் தி.மு.க., பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி கொடுக்கவில்லை. தமிழகத்தை பழிவாங்கும் நோக்கில் மோடி அரசு செயல்படுகிறது. வட மாநிலத்தை வாழவைக்கும் மோடி, தென் மாநிலத்துக்கு நிதி கொடுக்காமல் ஒதுக்குகிறார் என காரைக்குடியில் நடந்த பிரசாரத்தின் போது சிபிஎம் மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, பா.ஜ.க 10 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தது. ஆனால் 3 ஆண்டுகளில் தி.மு.க., பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி கொடுக்கவில்லை. தமிழகத்தை பழிவாங்கும் நோக்கில் மோடி அரசு செயல்படுகிறது. வட மாநிலத்தை வாழவைக்கும் மோடி, தென் மாநிலத்துக்கு நிதி கொடுக்காமல் ஒதுக்குகிறார். விவசாயிகள் வாங்கிய ரூ. 12 ஆயிரம் கோடி கடனை இந்த மூன்று ஆண்டில் தி.மு.க., தள்ளுபடி செய்துள்ளது. மோடி அரசு விவசாய கடனையோ, கல்விக்கடனையோ தள்ளுபடி செய்ததில்லை.

அந்நிய நாட்டிடம் ரூ.90 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். 150 கார்ப்பரேட் குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. வெறும் வாக்குமூலத்தை வைத்தே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி பா.ஜ., ஊழல் செய்துள்ளது. பா.ஜ.,வுக்கும் எங்களுக்கும் எந்த உறவு இல்லை என்று பழனிச்சாமி தெரிவிக்கிறார். ஆனால் கூட்டத்தில் 50 முறைக்கு மேல் ஸ்டாலின் பெயரை கூறும் பழனிச்சாமி ஒருமுறை கூட மோடி பெயரை தெரிவித்ததில்லை என பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

Tags

Next Story