தெரிந்தது இறந்தவரின் அடையாளம்

தெரிந்தது இறந்தவரின் அடையாளம்
X

பைல் படம்

இலுப்பூர் கட்டியக்காரன்பட்டி பிரிவு அருகே வாகனம் மோதி இறந்தவர் குறித்த விபரம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்து உண்டாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கட்டியக்காரன்பட்டி பிரிவு சாலை அருகே நேற்று முன்தினம் அடையாளம் தெரி யாத வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார். இறந்தவர் உடல் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டதால் முகம் சிதைந்திருந்தது. இதுபற்றி இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் இலுப்பூர் அருகே உள்ள பாப்பான்களத்தை சேர்ந்த கருப்பையா என்பது தெரிய வந்தது. அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு சரக்கு வாகன டிரைவர் விராலிமலை அருகே உள்ள மணமேட்டுப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story