திருச்சி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரின் சின்னம் என்ன?
செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ
திருச்சியில் இன்று கட்சி நிர்வாகிகள் பலரை சந்தித்து ஆதரவு திரட்டிய துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,"என்ன சின்னம் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாளை செய்தியாளர்களை நேரில் அழைத்து தெரிவிப்பேன்". தேர்தல் காலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என வலியுறுத்தி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
அது காவல்துறையினரின் கடமையாகும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். சாதாரண எளிய மக்கள், வியாபாரிகள் திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை செலவினங்களுக்கு பணம் எடுத்துச்செல்லும் போது பறக்கும் படையினரின் சோதனையால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இதுபோன்ற நேரங்களில் காவல்துறையினர் கருணை உள்ளத்தோடு நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையமும் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும். மோடி தேர்தல் நேரங்களில் மட்டுமே தமிழகத்திற்கு வருகை தருகிறார். சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் புயல் மழையால் அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சுமார் 37ஆயிரம் கோடி சொத்துக்கள் அழிந்த போது வராத மோடி, தற்போது ஏன் அடிக்கடி வருகிறார்.
மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும், தமிழகத்திலேயே குடியிருந்தாலும், நமோ செயலிகளில் நிர்வாகிகளை சந்தித்தாலும் சரி, 40 க்கு 40ம் திமுகவிற்கென தமிழக மக்கள் தீர்க்கமான முடிவெடுத்து விட்டார்கள். திருச்சி தொகுதி மக்கள் எனக்கு அமோக வரவேற்பளிப்பதாக கூறினார்.