அமைச்சர் பிடிஆர் சொல்வது பச்சை பொய் - ஆர்.பி. உதயகுமார்
தேர்தல் பிரசாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதி டி.கல்லுப்பட்டியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வாக்கு சேகரித்தார் அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் மக்களிடையே உரையாற்றும் போது, கேப்டன் விஜயகாந்த் மறைந்த போதும் கூட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். இன்றைக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக ரத்து செய்து விட்டது என்று அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் பச்சை பொய் சொல்கிறார் கொரோனா காலத்தில கூட தங்கச் சுரங்கங்கள் மூடி இருந்த காலத்தில் கூட ஜெயலலிதாவின் தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடியார் தலைமையில் ஒரு லட்சம் தங்கக் காசுகளை நாம் கொடுத்து இருக்கிறோம்.
ஆடு, மாடு வழங்கும் திட்டம். மடிக்கணினி,அம்மா மினி கிளினிக் என்று அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து விட்டார்கள். நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்கள் அதை செய்யவில்லை அதையெல்லாம் மீட்டெடுப்பதற்காகத்தான் விஜய பிரபாகரனை எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிறுத்த எடப்பாடியும் பிரேமலதாவும் தயாராக இருந்தார்கள் ஆனால் விஜய பிரபாகரன் தேர்ந்தெடுத்த தொகுதி விருதுநகர் தொகுதி என்றார். தொடர்ந்து பேசிய ஆர்.பி. உதயகுமார் நமது சின்னம் என்று கூறிய போது கூட்டத்திலிருந்த பெண்கள் இரட்டை இலை என கூறினார்கள் இதுதான் என சிரித்துக் கொண்டே இரட்டை இலை ஆதரவோடு கொட்டும் முரசு சின்னத்தில் நிற்கிறார்கள் .
எனவே வாக்குச்சாவடி சென்று இரட்டை இலையை தேடக்கூடாது ஏனென்றால் விஜய பிரபாகரனுக்கு கொட்டுமுரசு சின்னம் தான் உள்ளது. நாலாவது சின்னம் முரசு சின்னம் நாலாவது பொத்தானை அழுத்தினால் கொட்டும் முரசு சின்னத்தில் லைட் எரியும் அது இரட்டை இலைக்கு போட்டதாக அர்த்தம் அதுதான் வெற்றி முரசு கொட்டுமுரசு எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் என்னடா மொட்ட மண்டையன் வந்தானே இரட்டை இலை சின்னத்தை காணோமே என்று தேடக்கூடாது என நகைச்சுவையாக பேசினார்.