கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் அளிக்க வாட்ஸ் அப் எண் வெளியீடு..!

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் அளிக்க வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர் மற்றும் விற்பனை செய்வோர் குறித்து தகவல் தெரிவிக்க காவல்துறை சார்பில் வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.. கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்க காவல் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரவிக்கும் வகையில் வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 88383-52334 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு கள்ளச்சாராயம் சம்மந்தமான தகவல் தெரிவிக்கலாம். மேலும் கட்டணாமில்லா தொலைபேசி எண் 10581 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் .

மேற்கண்ட எண்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், கடத்துபவர்கள், விற்பனை செய்வோர் குறித்து தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணானது முழுவதுமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story