சித்திரை தேர் திருவிழா எப்போது? - பக்தர்கள் விடுத்த கோரிக்கை

சங்கரி:சென்னகேசவப்பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா எப்போது? பக்தர்கள் விடுத்த கோரிக்கை....
சேலம் மாவட்டம், சங்ககிரி மலைமீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை நட்சத்திரம் அன்று நடைபெறும் நிகழாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி சித்திரைத்தேர்திருவிழா எப்பொழுது நடைபெற உள்ளதென பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீ தேவி, பூதேவி கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத்தேர்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் தேர்திருவிழாவின் போது சுவாமிகள் மலையிலிருந்து இறங்கி நகருக்கு எழுந்தருளிய பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வருரும் அதனையடுத்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். சித்திரை நட்சத்திரம் ஏப்ரல் 23ம் தேதி வருவதையொட்டி தற்போது மக்களவை தேர்தல் நடைபெறுவதால் சித்திரைத் தேர்திருவிழா நடைபெறும் தினத்தினை இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் பக்தர்களுக்கு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தகவல்களை சங்ககிரியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு வெளியே உள்ள தகவல் பலைகயில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story