3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆவின் பாலகம் எப்போது திறக்கப்படும்?

3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆவின் பாலகம் எப்போது திறக்கப்படும்?
 சிவகாசியில் 3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆவின் பாலகம் எப்போது பயன்பாட்டிற்கு விடப்படும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சிவகாசியில் 3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆவின் பாலகம் எப்போது பயன்பாட்டிற்கு விடப்படும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிவகாசியில் 3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆவின் பாலகம் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆவின் பாலகத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆவின் விற்பனை அதிகரிக்கும் நோக்கிலும் மற்றும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்து பொதுமக்களுக்கும் எளிய வகையில் சென்றடைய பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள்,அரசு பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் ஆவின் பாலகம் அமைத்து விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் சிவகாசி பகுதியில் பஸ் ஸ்டாண்ட்,காரனேசன்,ஏஜே கல்லூரி பஸ் ஸ்டாப்,இரட்டை பாலம் பகுதி உட்பட 15திற்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் எம்எல்ஏ அலுவலகம், திருததங்கல் புதிய பஸ் பஸ்டாண்ட்,பழைய விருதுநகர் ரோடு,இபி அலுவலகம் பகுதிகள் உள்பட ஆவின் பாலகங்கள் திறப்பு விழா காணாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே கிடக்கின்றது.இந்த ஆவின் பாலகங்களை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் சிவகாசி பகுதிகளில் ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.மேலும் சிவகாசி பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் ஆவின் பாலகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆவின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.

Tags

Next Story