கணபதிபுரம் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

கணபதிபுரம் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

புதியதாக கட்டி உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதியதாக கட்டி உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சியில், பொற்பந்தல், சத்யா நகர் கணபதிபுரம், கிடங்கரை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. இப்பகுதியில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தவும் அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, பொற்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட கணபதிபுரம் கிராமத்தில், புதியதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி குடிநீர் வினியோகிக்க, 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ், 14.75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணி துவங்கி, 2 மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றது. எனினும், இதுவரை புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி குடிநீர் வினியோகிக்காமல் உள்ளது. எனவே இப்பகுதியில் புதியதாக கட்டி உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: புதியதாக கட்டி உள்ள டேங்கிற்கு, இப்பகுதி ஏரியில் ஏற்கனவே அமைத்துள்ள ஆழ்த்துளை கிணற்று மூலம் குடிநீர் இணைப்பு பொருத்த வேண்டி உள்ளது. அதற்காக குடிநீர் பைப் பதித்தல், மின் மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் செய்ய நிதி பற்றாக்குறை உள்ளதால் தாமதம் ஆகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story