அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது?
அங்கன்வாடி கட்டிடம்
திருவாலங்காடு அருகே புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் எல்.வி.புரம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் பயின்று வருகின்றனர். இங்கு, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்ததால் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மூன்றாண்டுக்கு முன் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பழைய கட்டடம் அகற்றப்பட்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 9 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கடந்தாண்டு அங்கன்வாடி மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள் பழுதடைந்துள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பயில்விக்கப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய அங்கன்வாடி மையத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
Next Story