புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை திறப்பு விழா காண்பது எப்போது?

புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை திறப்பு விழா காண்பது எப்போது?
புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை திறப்பு விழா காண்பது எப்போது?
புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை திறப்பு விழா காண்பது எப்போது? என பொதுமக்கள் காத்துள்ளனர்

செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள அனுமந்தபுத்தேரியில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, துாய்மை இந்தியா திட்டத்தில், சமுதாய கழிப்பறை கட்டுவதற்காக, நகாரட்சி நிர்வாகம் 2021- - 22ம் ஆண்டில், 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிக்கு 'டெண்டர்'விடப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், கட்டட பணி நிறைவுபெற்றது. ஆனால், பணிகள் முடிந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால், அரசு வரிப்பணம் வீணாவதுடன், கட்டடம் பாழடைந்து வரும் அவல நிலை உள்ளதாக,

இப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், இப்பகுதியினர் இயற்கை உபாதைக்காக திறந்தவெளியை பயன்படுத்துவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story