வாக்களிக்க எந்தெந்த ஆவணங்களை பயன்படுத்தலாம் - கலெக்டர் வளர்மதி தகவல்
ஆட்சியர் வளர்மதி
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 19-ந்தேதி நடக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, வங்கி மற்றும் அஞ்சலகங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகங்கள், மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுனா் உரிமம், பணியாளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட தொழிலாளர் அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
தற்போது வழங்கப்படும் பூத் சிலிப்பை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்க இயலாது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாவிட்டாலும் இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள மேற்கண்ட ஆவணங்களை பயன்படுத்தி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுப்போடலாம். மேலும் தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமைைய நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.