எடப்பாடியோடு ஒப்பிட முடியாத ஸ்டாலினை எம்ஜிஆருடன் ஒப்பிடுவதா-அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி

எடப்பாடியோடு ஒப்பிட முடியாத ஸ்டாலினை எம்ஜிஆருடன் ஒப்பிடுவதா-அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி

எம்எல்ஏ ராஜன் செல்லப்பா 

எடப்பாடியோடு ஒப்பிட முடியாத ஸ்டாலினை எம்ஜிஆருடன் ஒப்பிடுவதா!-சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி
மதுரை வில்லாபுரம் 84-வது வார்டு பகுதியில் 40 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இதனை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து கூறுகையில்,_ திமுகவை பிஜேபி தமிழ்நாட்டில் எதிர்க்கும் என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு_ அண்ணாமலை பேச்சுகளை நாங்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, அவராக சொல்லிக் கொண்டிருந்தால் போதாது மக்கள் சொல்ல வேண்டும் பிஜேபி வளர்ந்து விட்டது என்று கூற முடியாது, பத்து தலைவர்களை வைத்துக்கொண்டு பிஜேபி முழுமையாக வளர்ந்து விட்டது நாங்களும் திமுகவுடன் போட்டி என்று சொன்னால் யார் ஏற்றுக் கொள்வார்கள். பிஜேபியில் தொண்டர்களை விட கட்சித் தலைவர்களை அதிகம் அப்படிப்பட்ட கட்சி திமுகவை எதிர்க்கிறது என்பது போன்ற விவாதங்கள் செய்திகளில் வரலாமே தவிர மக்கள் மத்தியில் இன்னும் பிஜேபி வளரவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் எம்.ஜி.ஆர் ஐ விட பன்மடங்கு அதிகமாக செயல்படுகிறார்கள் என்று திமுக அமைச்சர்கள் குறிப்பிடுவது குறித்த கேள்விக்கு_ எம்ஜிஆரை விட சிறந்தவர் யார் என்று சொன்ன வரலாறு இன்று வரை இல்லை புரட்சித்தலைவி அம்மா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கொண்ட வரப்பட்ட திட்டங்கள் போன்று இன்று வரை திமுகவினர்களால் கொண்டுவரப்பட்டுள்ளதா? எடப்பாடியாரோடு ஒப்பிட முடியாத ஸ்டாலினை எம்ஜிஆர் மற்றும் அம்மாவுடன் ஒப்பிடுவது நியாயமல்ல தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் வருவது குறித்த கேள்விக்கு_ மணல் அள்ளுதலை தடுக்க முயலும் அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தடுக்க முயலும் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை திமுகவினருக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருக்கிறது, அந்த அவப்பெயரை நீக்குவதற்கு அவர்களால் இயலவில்லை, போனாண்டு மேடையில் மிகத் தவறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இந்த ஆண்டு மீண்டும் இணைத்திருக்கிறார்கள், ஃபார்மாலிட்டிக்கு தான் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள், சட்ட ஒழுங்கு ஒழுங்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை அவர்கள் கட்சிக்காரர் தவறு செய்தால் காப்பாற்ற வேண்டும் என்று அந்த அரசு முயற்சிக்கிறது, புரட்சித்தலைவி அம்மா காலத்திலே கட்சிக்காரர்கள் தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள், ஆனால் இந்த அரசு தவறு செய்தவர்களை காப்பாற்றுவதற்காகவே அமைச்சரும் மற்றும் முதலமைச்சரும் செயல்படுகிறார்கள், சட்ட ஒழுங்கு கெட்டுப் போய் கிடக்கிறது என்று தெரிவித்தார்.

Tags

Next Story