ரோட் ஷோவிற்கு அனுமதி அளிக்காதது ஏன்?-பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்!

ரோட் ஷோவிற்கு அனுமதி அளிக்காதது ஏன்?-பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்!

பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்

பிரதமர் நிகழ்விற்கு அனுமதி மறுப்பது ஏன் என பாஜக மாவட்ட தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து பிரதமர் வருகைக்கு பாதுகாப்பு அளிக்க மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பிய சூழலில் அது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழுவினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் வழக்கறிஞர் அணி உடன் வந்திருந்தார். பிரதமர் மோடி பங்கு கொள்ளக்கூடிய நான்கு கிலோமீட்டர் அளவிலான Road show அனுமதி மறுத்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை ஏன் அனுமதி அளிக்க முடியவில்லை என்ற காரணங்களை கேட்டறிந்து கொள்ள வந்திருப்பதாக தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வருகின்ற 18-ஆம் தேதி மோடி கலந்து கொள்ளக்கூடிய road show குறித்தான அனுமதி கடிதத்தை காவல் துறையிடம் ஒப்படைத்திருந்த நிலையில் நேற்று இரவு அனுமதி மறுத்து கடிதம் அனுப்பி அதற்கான நகல்கள் தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார். சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் (SPG) முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,மற்றும் உயர் அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டமானது நடைபெற்றது என்றவர் எங்கள் தலைமையில் தொடர்ச்சியாக அனுமதி கேட்டு வருவதாகவும் காஷ்மீர்,கேரளாவில் பேரணி நடைபெற்று வருகிறது அமைதி பூங்கா என்று சொல்லக்கூடிய தமிழ்நாட்டில் ஏன் அனுமதி இல்லை என்ற கேள்வி கேட்டுள்ளோம் என்றார்.மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் இதுவரை பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் தரப்பில் சொல்லவில்லை என்றும் ரோட் ஷோ எப்படி இருக்கும் அதற்கு எவ்வாறு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென கோவை மாநகர காவல்துறைக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்கள்.

மேலும் தேசிய முகமை பாதுகாப்பில் இருக்கக் கூடிய மாவட்டமாகவும் ஏற்கனவே குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்ற இடங்களால் காவல்துறை மேற்கோள்காட்டி அனுமதி மறுப்பதாக தெரிவித்தார். காஷ்மீர் கேரளா போன்ற இடங்களில் பேரணி நடக்கும் பட்சத்தில் இங்கு அனுமதி கொடுத்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது எனவும் மாநகர காவல் ஆணையர்தான் அனுமதி மறுப்பு என்று நேரடியாக சொன்னார் என்றவர் அரசியல் அழுத்தத்தின் காரணமா? அல்லது உயர் அதிகாரி அழுத்தத்தின் காரணமாக?? என்று தெரியவில்லை என்றார்.பிரதமர் மாலை 5 மணிக்கு வருவதாக உள்ளது எனவும் கவுண்டம்பாளையத்தில் தொடங்கி ஆர் எஸ் புரம் பகுதியில் நிறைவடைகிறது.மூன்று புள்ளி ஐந்து கிலோ மீட்டர் நீளப்பாதை இருபுறமும் மக்கள் வரவேற்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story