அறிவித்த ஊதியத்தை வழங்காதது ஏன்?
பெரம்பலூரில் ஆய்வு செய்த தூய்மை பணியாளர்கள் தேசிய ஆணையத்தின் தலைவர், அறிவித்த ஊதியத்தை வழங்காதது ஏன்? எனக் கேட்டு கணக்குகளை சமர்பிக்க உத்தரவிட்டார்.
துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை வழங்காதது ஏன் துப்புரவு பணியாளர்களுக்கான தேசிய ஆணைய தலைவர் பெரம்பலூரில் ஆய்வு மேற்கொண்டு கேள்வி?.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் பெரம்பலூர்புதிய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கிவரும், குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்பொழுது அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களது ஊதியம் மற்றும் வேலைகள் குறித்து கேட்டறிந்தார் அப்போது பணியாளர்களின் சம்பளம் மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் வழங்கப்படுகிறதா என்று கேட்டு. துப்புரவு பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு வரும் ஊதிய தொகையை குறித்தசெல்போன் குறுஞ்செய்தி பார்வையிட்டு அவர்களது வங்கி கணக்கிற்கு மிகவும் குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டு வருவதால், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் ஒப்பந்தக்காரர் ஆகியோரிடம் எதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது ஏன் இவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
இதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார், அதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உடைகள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது குறித்து கணக்குகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கற்பகம் நகராட்சி ஆணையர் ராமர், மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.