குடும்ப தகராறு காரணமாக கணவனை அடித்து கொலை செய்த மனைவி

குடும்ப தகராறு காரணமாக கணவனை அடித்து கொலை செய்த மனைவி

 தலைவாசல் அருகே குடும்ப தகராறு காரணமாக கணவனை மனைவி அடித்து கொலை செய்ததால் பரபரப்பு உண்டானது.   

தலைவாசல் அருகே குடும்ப தகராறு காரணமாக கணவனை மனைவி அடித்து கொலை செய்ததால் பரபரப்பு உண்டானது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஆதிமூலம் (57). இவர் ஆத்தூர் மின்வாரிய (தெற்கு) அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு வளர்மதி (47) என்ற மனைவி கலைச்செல்வன் (19) என்ற மகனும் உள்ளனர்.கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கணவன் மனைவியிடையே வாக்கு வாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.தொடர்ந்து மகன் கலைச்செல்வன் மற்றும் மனைவி வளர்மதி ஆகிய இருவரும் ஆதிமூலத்தை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதிமூலம் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் இருந்து வந்த தலைவாசல் போலீசார் ஆதிமூலத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story