காக்கனாம்பாளையத்தில் மனைவி புகார்: வன்கொடுமை சட்டத்தில் கணவன் கைது

காக்கனாம்பாளையத்தில் மனைவி புகார்: வன்கொடுமை சட்டத்தில் கணவன் கைது

கோப்பு படம் 

திருப்பத்தூர் அடுத்த காக்கனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனைவி புகார் அளித்த நிலையில், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் கணவன் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே காக்கனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜெகதீஷ்(26) இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட்டில் வேலை செய்து வருகிறார்.

இவரும் காக்கனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் வெற்றிச்செல்வி(22). என்பவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே திருமணமானது முதல் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

மேலும் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இரு நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதில், ஜெகதீஷ் வெற்றிச்செல்வியை திட்டி உள்ளார். இது குறித்து வெற்றிசெவ்வி குரிசிலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் ஜெகதீசனை கைது செய்து வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story