விபரங்கி நாதபுரத்தில் கணவரை காணவில்லை மனைவி புகார்
காவல் நிலையம்
விருதுநகர் பரங்கிநாதபுரம் பகுதியைச் சார்ந்தவர் மாரியப்பன் வயது 52 இவர் மனைவி ஜானகி. மாரியப்பன் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் கடை வைத்து நடத்தி வந்ததாகவும், கடந்த இரண்டு வருடமாக அவருக்கு கண் பார்வை குறைந்து வந்ததாகவும்,
இதன் காரணமாக வியாபாரத்தை நிறுத்தி விட்டதாகவும் அவர் அடிக்கடி விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முனியாண்டி கோவில் மற்றும் தேசபந்து மைதானத்தில் வந்து உட்கார்ந்து இருப்பதாகவும்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 7 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே அமர்ந்திருந்த மாரியப்படை காணவில்லை எனவும் வெளியே சென்று இருப்பார் வந்து விடுவார் என நினைத்திருந்ததாகவும், தற்போது வரை அவர் காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தரக்கூடிய அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் அடிப்படையில் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.