கொத்தனார் மாயம் - மனைவி போலீசில் புகார்
கணவனை காணவில்லை என மனைவி புகார்
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியில் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற கணவனை காணவில்லை என மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விராலிமலை ஒன்றியம் மாத்தூர் நாஞ்சிலார் நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (60). கொத்தனார் விஸ்வநாதன் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வசந்தா மாத்துார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
Next Story