மின் விபத்தில் மனைவி மரணம் - நடவடிக்கை எடுக்க கோரி கணவர் மனு
மனு அளிக்க வந்தவர்கள்
விழுப்புரம் அருகே உள்ள பொய்யப்பாக்கம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் விக்னேஷ் மனைவி கலைவாணி (வயது 26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 23-ந் தேதி காலை கலைவாணி, எருமனந்தாங்கல் பகுதி யைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் உளுந்து மற்றும் காராமணி பயிர் அறுவடை பணிக்காக சென்றார்.
அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் நடந்து செல்லும்போது அங்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கிய தில் கலைவாணி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் விக்னேஷ் தனது 3 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.
அம்மனுவில், எனக்கும் கலை வாணிக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கலைவாணி, வயல்வே லைக்கு சென்றபோது அங்கு மின்வாரிய ஊழியர்களின் கவனக்கு றைவாலும், அஜாக்கிரதையாலும் உயரழுத்த மின்கம்பி அறுந்து கரும்பின் மேல் கிடந்ததை கவனிக்காமல் தொட்டுவிட்டதால் மின் சாரம் தாக்கி இறந்துவிட்டார். எனவே எனது மனைவி கலைவாணி இறப்பிற்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் 3 குழந்தைகளுடன் தவித்து வரும் எங்களுக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறி யிருந்தார். மனுவைப்பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.