தேனி அருகே குடும்பத்தகராறில் மனைவி கொலை: கணவர் காவல் நிலையத்தில் சரண்
மனைவியை கொலை செய்தவர்
தேனி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் (36) இவரது மனைவி பிரியங்கா (29) உசிலம்பட்டியை சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மஞ்சுநாயக்கன்பட்டி கிரிமத்தில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவர் மகாராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊர் வந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் இருவருக்குமான பிரச்சினை பெரிதாக மகாராஜன் தனது மனைவி பிரியங்காவின் கழுத்தை நெரிநத்து கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து மகாராஜன் பழனிச் செட்டிபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தகவல் கிடைத்தவுடன் சம்பவம் சம்பவ இடத்திற்கு வந்த பழனிச்செட்டிபட்டி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பழனிச்செட்டிபட்டி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வந்த ஒரே வாரத்தில் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.