தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலக ஊழியர் மனைவி தற்கொலை

தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலக ஊழியர் மனைவி தற்கொலை
தற்கொலை 
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலக ஊழியர் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அலுவலகத்தில் உதவியாளராக தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருபவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நயினார் (32) இவரது மனைவி ராமலட்சுமி (26). இவர்களுக்கு ஆறு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தர்ஷன் (5) அபி (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்கள் குடும்பத்துடன் நாகர்கோவில் கட்டையன் விளை காமராஜர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையே நகை பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ராம லட்சுமியின் சகோதரர் மகாலிங்கம் (30)என்பவர் நாகர்கோவிலில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமலட்சுமியின் வீட்டில் தங்கி உள்ளார். சகோதரிக்கும் சகோதரி கணவர் நயினருக்கும் இடையே தகராறு ஏற்படும் நேரங்களில் இவர் சமாதானம் செய்து வைப்பது வழக்கம்.

நேற்று காலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவன் மனைவியை சமாதானம் செய்து வைத்துவிட்டு மகாலிங்கம் வேலைக்கு சென்று விட்டார். பகல் 11 மணியளவில் தனது தங்கையை மகாலிங்கம் போன் மூலம் அழைத்த போது அவர் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க அறையில் உள்ள ஃபேனில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து மகாலிங்கம் கதறினார். அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். டவுன் டிஎஸ்பி (பொறுப்பு) சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story