காட்டு யானை அட்டகாசம் - விவசாயிகள் பாதிப்பு

காட்டு யானை அட்டகாசம் -  விவசாயிகள் பாதிப்பு
சேதமடைந்த தென்னை மரம் 
பண்பொழி அருகே ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்கோவில் தென்புறம், கடந்த பத்து தினங்களாக, ஒற்றை காட்டு யானை ஒன்று தினமும் வயல்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, நெல் பயிர்கள் உள்ளிட்ட மரங்களை நாசம் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் வயலுக்கு வந்து நடப்பட்டிருந்த தென்னை மரங்களை வேரோடு புடுங்கி அட்டகாசம் செய்து வருகின்றனர். ஆகவே வனத்துறையினர் காட்டு யானையை வனத்துறை பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர் .

Tags

Next Story