பேரணாம்பட்டு: காட்டு யானைகள் அட்டகாசம்
காட்டு யானைகள் அட்டகாசம்
பேரணாம்பட்டில் விவசாய நிலங்களில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து நெற்பயிரை சேதப்படுத்தின
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகில் உள்ள ஜங்கமூர் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள ராஜ்குமார், கார்த்திக்பாலாஜி ஆகிய 2 விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் மோர்தானா வனப்பகுதியில் சுற்றித்திரிந்து வரும் 2 காட்டு யானைகள் புகுந்து நெற்பயிரை மிதித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. தகவலறிந்ததும் பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார் தலைமையில் வனவர் அண்ணாமலை, வனகாப்பாளர்கள் வெங்கடேசன், ரவி, புருஷோத்தமன் ஆகியோர் கிராம மக்களுடன் இணைந்து பட்டாசு, பாணம், வெடி ஆகியவற்றை வெடித்து அருகிலுள்ள குண்டலபல்லி வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்டியடித்தனர். பேரணாம்பட்டு வனசரக பகுதியில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் பார்வையிட்டார்.
Next Story