பேரணாம்பட்டு அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்.
பயிர்கள் சேதம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளதால் யானைகள் ,சிறுத்தைகள் மற்றும் காட்டுப்பன்றிகளால் அவ்வப்போது விவசாய நிலங்கள் சேதம் அடைந்து வருகின்றன. இதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள சீனிவாசன் என்பவருடைய விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் அவர் வளர்த்து வந்த தென்னை மரம், வாழைமரம் மற்றும் துவரைச் செடிகள், அதே பகுதியில் முனியம்மாள் என்பவருடைய விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் தீவனப் பயிர்கள் கல் கம்பங்கள் மற்றும் பைப்புகளை சேதப்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நிலங்களில் சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மேலும் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story