குடியாத்ததில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்

குடியாத்ததில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்

கோப்பு படம் 

குடியாத்தம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகளால் பயிர்கள் சேதமாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி ஆந்திர மாநில எல்லையையொட்டி இருப்பதால் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தமிழக வனப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் குடியாத்தம் அடுத்த பரதராமி வனப்பிரிவு டி.பி.பாளையம் பகுதியை சேர்ந்த ராணி என்பவரின் விளை நிலங்களுக்குள் 12 காட்டு யானைகள் புகுந்துள்ளன. இந்த யானைகள் கூட்டம் ஏராளமான வாழை, கொய்யா, மா மரங்கள், வேலி கம்பங்கள், பைப் லைன் ஆகியவற்றை சேதப்படுத்தின.

மேலும் அதே கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவரது நிலத்தில் புகுந்து நெற்பயிர்கள், கல் கம்பங்களையும் உடைத்து நாசம் செய்தன. தொடர்ந்து பல மணி நேரம் விளைநிலங்களில் அட்டகாசம் செய்தன. இதை அறிந்த கிராம மக்களும், விவசாயிகளும் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.

Tags

Next Story