காட்டு யானைகள் அட்டகாசம் : பயிர்கள் சேதம்!

காட்டு யானைகள் அட்டகாசம் : பயிர்கள் சேதம்!

பயிர்கள் சேதம்

குடியாத்தம் அருகே காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.
தமிழக எல்லையான அரவட்லா வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் புகுந்து விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தின. அதாவது, வேலூர் ரங்கம்பேட்டையை சேர்ந்த சிகாமணியின் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த கேழ்வரகு, ராஜ்குமார் நிலத்தில் நடவு செய்திருந்த நெற்பயிரை மிதித்து நாசப்படுத்தின. பின்னர் காட்டுயானைகள் அங்கேயே அட்டகாசத்தில் ஈடுபட்டு பயங்கர சத்தத்துடன் பிளிறின. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்கள் உதவியோடு பட்டாசுகளை வெடித்து மோர்தானா காட்டுக்கு விரட்டினர். ஆனால், காட்டுயானைகள் காட்டுக்கு செல்லாமல் மீண்டும் அங்குள்ள கானாற்று பகுதிக்கு திரும்பின. ஊருக்குள் காட்டு யானைகள் நுழைந்ததால் கிராமமக்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்து வனத்துறையினருடன் இணைந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story