தடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஊருக்குள் உலா வந்த காட்டு யானைகள்

தடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஊருக்குள் உலா வந்த காட்டு யானைகள்

கோப்பு படம் 

தடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஊருக்குள் உலா வந்த காட்டு யானைகளை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தடாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதை ஆகிவிட்டது.

சில தினங்களுக்கு முன்பு கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்த நிலையில் யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன் ஊருக்கு உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இந்நிலையில் தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் மூன்று குட்டிகளுடன் ஊருக்குள் உலா வந்த ஐந்து காட்டு யானைகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் மலைப்பகுதி ஒட்டியுள்ள பகுதியில் அகழிகள் அமைத்து யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே உயிர் சேதம்,பயிர் சேதம் போன்ற பாதிப்புகளில் இருந்த்து பாதுகாக்க முடியும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story