வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம்
கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்
திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஓடை, வயல்வெளி, கண்மாய்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழை அதிக அளவு பெய்த காரணத்தால் வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கண்ணாபட்டி பகுதியில் இருந்து வெங்கட்டாம் பட்டி பிரிவு வரை ஒரு கிளை வாய்க்கால் வெட்டி மழைக்காலங்களில் பெய்யும் மழை உபரி நீரை நிலக்கோட்டை சுற்றியுள்ள கண்மாய்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story