கிடா முட்டு போட்டி

கிடா முட்டு போட்டி

திருச்சுழி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.


திருச்சுழி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி அடுத்த கொட்டகாட்சியேந்தல் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சீராங்கன்னி அம்மன், ஸ்ரீ இராக்காச்சி அம்மன், ஸ்ரீ கருப்பணசாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் முதலாமாண்டு கிடா-முட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதியுடன் நடைபெற்ற இந்த கிடாமுட்டு போட்டியை திருச்சுழி DSP ஜெகநாதன் தொடங்கி வைத்தார். காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை போட்டி நடைபெற்ற இந்த கிடாமுட்டு போட்டியில் கிடாய் க்கள் ஆக்ரோசமாக மோதி கொண்டன. கிடாமுட்டு போட்டியின் விதிமுறையாக 70 முட்டுக்களுக்கு பிறகும் அசராமல் களத்தில் நின்ற கிடாய்கள் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்ற கிடாய்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த கிடாய்களுக்கு பரிசாக பிரிட்ஜ் (குளிர் சாதனப்பெட்டி) வழங்கப்பட்டது.இந்த கிடாமுட்டு போட்டிக்காக கடந்த மே.7 ஆம் தேதி முதல் டோக்கன் முறையில் கிடாய்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை,மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 70 க்கும் மேற்பட்ட கிடாய் ஜோடிகள் முன்பதிவு செய்திருந்தன. இந்த நிலையில் போட்டி களத்தில் 30 க்கும் மேற்பட்ட கிடாய் ஜோடிகள் கலந்து கொண்டு ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்டன. மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு இந்த கிடாமுட்டு போட்டியை வெகுவாக கைதட்டி, ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். இந்த போட்டிக்காக சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story