காட்டுப் பன்றிகள் கூட்டம் கோழிகளை கொன்று அட்டகாசம்

காட்டுப் பன்றிகள் கூட்டம் கோழிகளை கொன்று அட்டகாசம்

கோழிகள்

பத்துகாணி அருகே பண்ணைக்குள் புகுந்து கோழிகளை கொன்ற காட்டுப்பன்றி கூட்டம். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவர் தனது வீட்டில் அழகிய பூந்தோட்டம் அமைப்பது மற்றும் கோழி வகைகளை வளர்ப்பது தொழிலாக கொண்டவர்.இவருடைய வீட்டில் உள்ள கோழி வளர்ப்பு இடத்தில் நேற்று காட்டு பன்றி கூட்டம் புகுந்து செய்த அட்டகாசம் மூலம் சுமார் 20 கோழிகளை கடித்து கொன்றுள்ளது.இதில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் 50 ற்கும் மேற்பட்ட கோழிகளை அவர் பறிகொடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் ஊரில் பல இடங்களில் நடப்பதாக ஊர் மக்கள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கான தீர்வு நடவடிக்கையினை வனத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story