வனப் பகுதிகளில் பரவிய காட்டு தீ
குமரி வனப்பகுதியை ஒட்டி, சிற்றாறு அரசு ரப்பர் கழக கூப்பில் காட்டுத்தீ பரவியது.
குமரி வனப் பகுதிகளிலும், வனத்தை ஒட்டிய பகுதிகளிலும் கோடை காலத்தில் காட்டு தீ பரவுவது வழக்கம். தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை யில், வனப்பகுதிகளில் புல் புதர்கள் கருகி உள்ளது. இதனால் கடந்த இரு வாரமாக சில பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது.இந்த நிலையில் சிற்றார் அரசு ரப்பர் கழக 52 ம் எண்கூப்பில் தீ பரவியது.
தீயை தடுக்க உரிய முனனேற்பாடுகள் இல்லாததால் தீ காற்றில் பரவி ரப்பர் மரங்களுக்கு சேதம் ஏற்பட்டது. சாதாரணமாக கோடை காலம் துவங்கும் போது வனத்துறை சார்பில் தீயை தடுக்க சிறப்பு காவலர்கள் அமர்த்துவது பணி வழக்கம். தற்போது இதற்கான பணியாளர்களும் இல்லை கூறப்படுகிறது.வரும் நாட்களில் தீயால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, தீ தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகள் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.