நூறுநாள் சம்பள பாக்கியை உடனே வழங்கப்படுமா?: தீர்மானம் நிறைவேற்றம்
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், தஞ்சை மாவட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை தஞ்சை கணபதி நகரில், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பவித்ரா பங்கேற்று சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, மாவட்ட பொருளாளர் என்.வசந்தா, மாநிலக் குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி, அம்மாபேட்டை ஒன்றியக் கவுன்சிலர் என். வெற்றிச்செல்வி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேரவையில், மாவட்டக் குழு பொறுப்பு தலைவராக ஆர்.கலைச்செல்வி தேர்வு செய்யப்பட்டார்.
இப்பேரவையில், நூறு நாள் வேலைக்கான சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும். நூறு நாள் வேலையை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும், நிதியை குறைத்து ஒதுக்கீடு செய்து திட்டத்தை சீர்குலைக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.