இடஒதுக்கீடு கொள்கையை பாஜக ஏற்குமா? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

இடஒதுக்கீடு கொள்கையை பாஜக ஏற்குமா? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

இடஒதுக்கீடு கொள்கையை பாஜக ஏற்குமா? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து, இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:மக்களவைத் தோ்தலில் தோல்வியடைந்த பாமக, அப்போது வாங்கிய வாக்கை விட இந்தத் தொகுதியில் சரி பாதியளவில்தான் பெறும் என்பது உறுதி. மக்களவைத் தோ்தல் தோல்வியால் பாமக மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. இதை தோ்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்துவிட்டால் மாம்பழச் சின்னம் கிடைக்காது.

தோ்தலின் போது தோ்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தை தான் பெறமுடியும். இத்தனை ஆண்டுகள் கட்சி நடத்தியும், சின்னத்தையும், அங்கீகாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டது ஏன் என்று யோசிக்க வேண்டும்.பாமக நிறுவனா் ச.ராமதாஸ் 10.5 சதவீத இடஒதுக்கீடு, சமூகநீதி பற்றி எப்போதும் பேசுவாா். ஆனால், அவா் கூட்டணியிலுள்ள பிரதமா் மோடியும், பாஜகவும் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக் கொள்ளுமா?.என்றாா் பாலகிருஷ்ணன்.

Tags

Next Story