மல்லசமுத்திரத்தில் அரசு கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வருமா?

மல்லசமுத்திரத்தில் அரசு கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வருமா?

மல்லசமுத்திரத்தில் அரசு கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருமா? என்று கோரிக்கை எழுந்துள்ளது

மல்லசமுத்திரத்தில் அரசு கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருமா? என்று கோரிக்கை எழுந்துள்ளது

மல்லசமுத்திரம், டிச. 6 - மல்லசமுத்திரத்தில், பயன்பாடின்றி உள்ள, இருஅரசு கட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மல்லசமுத்திரம் டவுன்பஞ்சாயத்து அலுவலகம் அருகே, கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், பலஆயிரம் மதிப்பீட்டில், அருகருகே வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வட்டார தோட்டக்கலை அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டது. மல்லசமுத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள விவசாயிகள் விவசாய இடுபொருட்கள் மற்றும் பல்வேறு தேவைகளை இந்த அலுவலகம் மூலமாக, பூர்த்திசெய்து வந்தனர். தற்சமயம் கடந்த சிலவருடங்களாக, இந்த அலுவலகம் சிதிலமடைந்து விட்டதால், மல்லசமுத்திரம் அருகே உள்ள செம்பாம்பாளையம் பகுதியில், பலலட்சங்கள் மதிப்பீட்டில், இந்த அலுவலக கட்டடங்களை புதிதாக கட்டியுள்ளனர்.

எனவே, மல்லசமுத்திரத்தில் இருக்கும் பழைய கட்டடம் தற்சமயம் போதிய பயன்பாடின்றி காட்சிப்பொருளாய் உள்ளது. மல்லசமுத்திரத்தில், அஞ்சல் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கிக்கொண்டுள்ளது. காட்சிப்பொருளாய் உள்ள கட்டடத்தை புனரமைப்பு செய்து, அஞ்சல் அலுவலகத்தை இங்கு மாற்றினால், வாடகைபணம் மிச்சமாகி, அரசிற்கு லாபம் கிடைக்கும்.

Tags

Next Story