கோடையில் மக்களின் தாகத்தை சமாளிக்குமா? செம்பரம்பாக்கம் ஏரி

கோடையில் மக்களின் தாகத்தை சமாளிக்குமா? செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி 

கோடையில் மக்களின் தாகத்தை சமாளிக்குமா? செம்பரம்பாக்கம் ஏரி மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினந்தோறும் சென்னை மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் சுத்திகரிப்பு செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோன்று மழை காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிறைந்தால் செட்டர்களின் இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிறைந்து கடல் போல் காட்சி அளித்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து ஆங்காங்கே தரைகள் தெரியும் அளவிற்கு காட்சியளித்து வருகிறது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் 19.39 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் 2455 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து ஏதும் இல்லாத காரணத்தால் தற்போது தினமும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் மற்றும் சிப் காட்டிற்கு 158 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது அதுமட்டுமின்றி இந்த கோடை காலம் முழுவதும் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில்,

எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சிக்கராயபுரம் கல்குவாரியிலிருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் வரும் பருவ மழைக்கு முன்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள், செட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீரானது எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்,

குறிப்பாக இந்த கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் தண்ணீர் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் வறண்டு போகும் சூழல் ஏற்பட்டால் ஏரியின் முக்கிய பகுதிகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story